உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கு பணம் கொடுக்காமல் இருப்பதற்கு முயற்சித்து வருகிறது என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கும் செலவுகளை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.
அரசியலமைப்பில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்பதை நிதி அமைச்சின் செயலாளர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேநேரம் அரசாங்கம் அண்மையில் விதித்திருந்த வரியின் மூலம் 10 ற்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்த முடியும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.