எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவுக்கும் சபாநாயகருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக, சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில், ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.