இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளில், கஸகஸ்தானின் எலெனா ரைபகினா மற்றும் பெலராஸின் அரினா சபலெங்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.
முதலாவது அரையிறுதியில் கஸகஸ்தானின் எலெனா ரைபகினாவும் போலந்தின் இகா ஸ்விடெக்கும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், கஸகஸ்தானின் எலெனா ரைபகினா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் பெலராஸின் அரினா சபலெங்கா, கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் பெலராஸின் அரினா சபலெங்கா, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.