ஜப்பான் கடலில் உள்ள போலி இலக்கை நோக்கி ரஷ்ய கடற்படை, சுப்பர்சோனிக் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள உருவகப்படுத்தப்பட்ட எதிரி போர்க்கப்பலின் மீது இரண்டு கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமைச்சகம் கூறியுள்ளது.
இரண்டு மாஸ்கிட் சுப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், வழக்கமான மற்றும் அணு ஆயுதப் போர்த்திறன் கொண்டவை, தங்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயர் தொழில்நுட்பம் கொண்ட பதினெட்டு அதிநவீன முக்கிய போர் டாங்கிகளான Leopard 2 டாங்கிகளை ஜேர்மனி, உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.