பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பூஞ்ச் செக்டாரில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக எல்லையாக செயல்படும் ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த சம்பவங்கள் நடந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய இராணுவம், உள்ளுர் மற்றும் உயர் மட்டத்தில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் இந்த விடயத்தை தீர்த்து வைத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத் துருப்புக்கள் அப்பகுதியில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாமல் விழிப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மணல் அகழுதல் மற்றும் கால்நடைகளை மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக அற்குள்ள குடிமக்கள் இந்திய பக்கம் செல்வதைத் தடுக்கும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பால் உள்ள கிராமங்களில் உள்ள மசூதிகளில் இருந்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
ஊடுருவல் முயற்சிகளின் முக்கிய மையங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் இந்திய இராணுவம் இந்த இப்பகுதியில் எச்சரிக்கையாக உள்ளதோடு பல சந்தர்ப்பங்களில், எல்லைக்கு அடுத்துள்ள கிராமங்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகளால் ஊடுருவலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கிராமவாசிகள் இந்தியப் பக்கம் நெருங்கினால், சிவிலியன்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை வேறுபடுத்திப் பார்ப்பது சிரமமாக இருக்கும் என இந்திய இராணுவம் தங்கள் சகாக்களுக்குத் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து வருகின்றன. அது இரு தரப்பாலும் பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருபுறமும் அதிக அளவில் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாகும், மேலும் பூஞ்ச் செக்டரில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை அப்பகுதியில் உள்ள இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.