பாகிஸ்தானில், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தி நேஷன் செய்தித்தாள், தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரவாதிகள் 58 பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 27 பொதுமக்கள், 18 பாதுகாப்பு படையினர் மற்றும் 17 தீவிரவாதிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதல்களில் 54 பொதுமக்கள் மற்றும் 80 பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 134 பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சிந்தனைக்குழுவான பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஃபார் கான்ஃப்ளிக்ட் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
குறித்த குழுவின் தகவல்களின் பிரகாரம், ஜூன் 2015க்குப் பின்னர், பாகிஸ்தான் ஒரே மாதத்தில் 58 தாக்குதல்களைச் சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
பெப்ரவரியில், 32 சதவிகிதம் அதிகமான தீவிரவாதத் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவிகிதம் குறைந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புப் படைகள், தீவிரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் முடுக்கி, குறைந்தது 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 75 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் (கேபி) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பலுசிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, இதில் குறைந்தது 22 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 25பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 61 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மீள்எழுச்சி பாகிஸ்தானுக்கு ஆபத்தானது என்று ஆப்கானிஸ்தான் புலம்பெயர் வலையமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் தலிபானின் தீவிரவாத துணை அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பழங்குடி மண்டலங்களில் மட்டுமல்ல. மற்ற இடங்களிலும் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது.
பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்படும் குறித்த அமைப்பு எச்சரித்துள்ளதோடு, அடிமைப் படையுடனான எங்கள் போரில் இருந்து காவலர்கள் விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.