தென் அமெரிக்கா Guyana பகுதியில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் இந்த தீ பரவலுக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படவில்லை என Guyana பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை Guyana பொலிஸார் முன்;னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,