இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கம் முன்வைத்த கட்டண அதிகரிப்பு சதவீதத்தை விட குறைந்த சதவீதத்தில், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியுமென ஜனக்க ரத்நாயக்க இரு சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் உருவாகிய மின்சார நெருக்கடிக்கான மாற்றுத்தீர்வுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.