ஜூலை மாதம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்சார சபை விண்ணப்பித்திருந்தது.
அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.
இதனால் புதிய மின் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் மின் கட்டண உயர்வு நுகர்வோரைக் கடுமையாக பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.