கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளபுயலானது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்லு ம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை அண்மித்த மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
குறித்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், பங்களாதேஸ் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.
இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.