தமிழ்நாட்டில் சென்னை – மதுரை நகரங்களுக்கிடையே இடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்ததாக சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்தகட்டமாக வந்தே பாரத் ரெயிலை சென்னை முதல் நெல்லை வரை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
அதிவிரைவு ரெயில்களின் வேகத்துக்கு இணையாகவே வந்தே பாரத் ரெயிலின் வேகமும் இருப்பதால் ரெயில் பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே குறித்த சேவைக்கான பெட்டிகள் தயாரானதும் விரைவில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் எனவும், தென்மாவட்ட ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைக்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.