கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் மகுடம் சூடியுள்ளார்.
22 வயதான போலந்தைச் சேர்ந்த இவர், நேற்றையதினம் செக் நாட்டைச் சேர்ந்த கரோலினா முச்சோவாவுக்கு எதிராக 6-2 5-7 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
போட்டியின் ஆரம்பத்தில் 6-2 3-0 என முச்சோவா முன்னிலை வகிக்க, உலக தரவரிசையில் முதல்நிலை வீராங்கனைக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும் இதனை தொடர்ந்து மீண்டெழுந்த இகா ஸ்வியாடெக், இறுதி மூன்று கேம்களை வெற்றிகொண்டு மகுடம் சூடினார்.