அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், ஹண்டர் வேலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்சியொன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பேருந்தின் சாரதியைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.