பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதன்முதலில் 1994 இல் பதவிக்கு வந்த பெர்லுஸ்கோனி 2011 வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார்.