ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.