தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவுக்கு (Tonga)அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிலநடுக்கத்தின் மையம் டோங்காவிற்கு தென்மேற்கே 280 கிமீ தொலைவில் 167.4 கிமீஆழத்தில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக பிஜி தீவுகளின் தெற்குப் பகுதிக்கு அருகே 7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.