பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக், அண்மைக்காலமாக அந்நாட்டின் அதிகாரிகளுடன் இணைந்து சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 105 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் ரிஷி சுனக் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பலர் ரிஷி அப்பாவி அகதிகளைச் சிரமத்திற்கு ஆளாக்குவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தன் நாட்டிற்குள் சட்டவிரோதக் குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் ரிஷி உறுதியாக உள்ளார் எனக் கூறப்படுகின்றது.
பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து ரிஷி சுனக், அந்நாட்டில் சட்ட விரோதக் குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். இதன் காரணமாக சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.