இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் தனது 77 ஆவது வயதில் காலமானார்.
யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகாலத் தலைவியாகச் செயற்பட்ட அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவராவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வு திங்கட்கிழமை (19) முற்பகல் 11 மணியளில் அவரது உடுவில் இல்லத்தில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.