இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார கூட்டு ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஈரானிய எரிசக்தி அமைச்சர் அலி-அக்பர் மெஹ்ராபியன் அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார உறவுகளின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை வலியுறுத்திய ஈரான் அமைச்சர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பல ஆற்றல்கள் இருப்பதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறிய குறிக்கோளை பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றுவதற்காக ஒரு கூட்டு பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆணைக்குழுவை நிறுவுவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆணைக்குழு தொடங்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உகந்ததாக அதிகரிக்க உதவும் என ஈரானிய எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.