95 ஒக்டேன் பெட்ரோல் அல்லது வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கோ தற்போது தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. களஞ்சியசாலைகளில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
95-ஒக்டேன் பெட்ரோலின் நாளாந்தத் தேவை சுமார் 80 முதல் 100 மெட்ரிக் தொன் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது 601 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் உள்ளதோடு 9,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வியாழக்கிழமை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒக்டேன் 92 ரகம் 53,632 மெட்ரிக் தொன்னும் ஓட்டோ டீசல் 103,087 மெட்ரிக் தொன்னும் சுப்பர் டீசல் 2,977 மெட்ரிக் தொன்னும், டீசல் மற்றும் ஜெட் ஏ1 எரிபொருள் 37,316 மெட்ரிக் தொன்னும் இருப்பதாக கூறியுள்ளார்.