களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தை அகற்றும் பணிகள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நிறைவடைந்த போதிலும், வீதியின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 07 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் பயணிகளின் வசதிக்காக நாரஹேன்பிட்டி புகையிரத நிலையம் வரை ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நேற்று பிற்பகல் தடம் புரண்டன.
இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.