சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்களைப் பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ”அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்தாவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ஆண்டு வருமானத்தில் ஐந்து சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசு முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.