நாட்டில் ஏற்பட்டுள்ள வங்கோரத்து நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முறியடிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன் மேம்படுத்தல திட்டத்தை ஆதரிக்கும் கூட்டு முயற்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.