டயகம நகரில் புதிதாக மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நான்காவதாக ஒரு மதுபானசாலை ஆரம்பிக்கப்படுவது அநாவசியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இபோராட்டத்தின் போது கறுப்பு கொடி கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி பொது மக்களும் மாணவர்களும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
டயகம நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் மேற்கு 3ம் பிரிவில் இருக்கும் வைத்தியசாலை வரை சென்று மீண்டும் நகரத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள் மதுபான சாலை அருகில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.