தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் வைத்திய கலாநிதி டிலீப் லியனகேயின் பங்களிப்புடன் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வட மாகாணத்தில் உள்ள தனியார் வைத்திய துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொது மக்களுக்கான பாதுகாப்பான தரமான வைத்திய சேவையானது தனியார் துறையிடமிருந்து கிடைக்கப் பெறுவதை மேற்பார்வை செய்யும் முகமாக அனைத்து மருத்துவத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களும் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையில் (PHSRC) பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி பதிவுகளை (www.phsrc.lk) இணையத்தளத்தின் ஊடாக (online) மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வடமாகணத்தில் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையில் பதிவு செய்யப்படாத ஒரு சில நிறுவனங்கள் உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.