கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயம் மேற்கோள்ளாத வயல்களுக்கும் அநாவசியமாக நீரினை பாய்ச்ச்சி விரயமாக்குவதும் அவதானிக்க முடிகின்றது.
இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைந்து வருகின்றமையால் நெல் அறுவடை காலம் வரைக்கும் விவசாயிகளுக்கு குளத்தின் நீர் போதியளவுக்கு வழங்க முடியாமல் போய்விடும் என்று விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பிரதேச விவாசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.