எதிர்வரும் 2 மாதங்களுக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் குறையும் என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் அரேபிய நாடுகளில் இலங்கை இறைச்சிக்கு விசேட கேள்வி காணப்படுகின்றது நிலையில் அதற்கான தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதனூடாக வெளிநாட்டு வருவாயினை ஈட்டிக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.