இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ‘இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலை‘ ஆகியவை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் குறித்த வைத்தியசாலைகளின் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் இது தொடர்பான கடிதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.