சீனாவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லாண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ரொக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் குறைந்தளவு மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு விண்கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.