அரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வலம்புரி சங்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவளை, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்