ஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நிலையில், 61 வயதான அஃப்சானே பயேகன் குறித்த விழாவுக்கு, குல்லா அணிந்தவாறு சென்றிருந்ததோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நீதிமன்றம் நடிகை அஃப்சானே பயேகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு மேலும் 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளது.
அத்துடன் அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளதால் வாரந்தோறும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.