சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், போர் நடந்து 100ஆவது நாளை எட்டிய நிலையில், சூடான் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து சூடான் இராணுவம் தமது பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், ‘ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிர் தப்பியது’ என குறிப்பிடப்பட்டுள்ளது