வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும் நோக்குடன் தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று (28) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றது.
அதே சமயம் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வந்த நிலையில் குறித்த முயற்சியானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் ,காணி உரிமைக்கான மக்கள் இயக்க பிரதிநிதி இரத்தினசிங்கம் முரளீதரன், வடமராட்சி கிழக்கி மக்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.