பிரேசிலைச் சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இவர் ஒருநாள் வீதியில் சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரது தொலைபேசியைப் பறித்துச் சென்றுள்ளார்.
இதன்போது இம்மானுவெல்லாவின் அழகால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அவரிடம் தனது மனதைப் பறிகொடுத்துள்ளார். இதனையடுத்து இம்மானுவெல்லாவைக் காதலிக்க ஆரம்பித்த அவர் நாளடைவில் அவரை அணுகி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது இம்மானுவெல்லாவுக்கும் இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்படவே இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இக்காதல் ஜோடி கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வரும் நிலையில் இவர்கள் குறித்த வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.