AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர். ‘இந்தியன்’ படத்தில் விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். அதனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கியதும் இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டன
எதிர்பாராத வகையில் இருவரும் மறைந்துவிட்டார்கள். இச்சூழலில் புதிய நடிகர்களை வைத்து இவ்விருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், இவர்கள் இருவருக்கும் திரையில் உயிர் கொடுக்க ஷங்கர் முயற்சிக்கிறார். இதனால் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரும் திரையில் உயிர்ப்புடன் ‘இந்தியன் 2’வில் இருப்பதை பார்ப்பது வேறு மாதிரியான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.