• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
‘ஐனாதிபதிக்கு வெள்ளையடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு‘

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/04
in Uncategorized
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெள்ளையடிக்கும் வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐனாதிபதி அலுவலகத்திலிருந்து மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக எமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.

அந்த விடயத்தில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை என்று சர்வதேச மட்டத்தில் காட்டிக்கொண்டு அதேநேரம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய ஒரு கட்டமைப்பு அடிப்படையில் அரசியலமைப்பில் இருக்கிற 13 ஆவது திருத்தம் தொடர்பாக பேச அழைத்துள்ளனர்.

இது மீண்டும் மீண்டும் வடக்கு, கிழக்கு வாழ் ஈழத் தமிழர்களை முட்டாளாக்கும் வேலை மட்டுமல்ல அது எந்தளவு தூரத்திற்கு ஈழத்தமிழர்களை ரணில் விக்கிரமசிங்க மதிக்கத் தயாரில்லை அல்லது கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்ற ஒரு செயலாகத் தான் இருக்கின்றது.

தமிழ்த் தரப்புகள் எந்தளவு தூரத்திற்கு தமிழ் மக்களுக்கு பேரம் பேசக் கூடிய வாய்ப்புகளை முற்றிலும் இல்லாமல் ஆக்கி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை அதுவும் சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத ஒரு ஆட்சியை முட்டுக்கொடுக்கின்ற ஒரு செயலாக மட்டும் தான் அமைகிறதென்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் ஏதோ பெயரில் அதிகாரப் பகிர்வு என்றும் 13 ஆம் திருத்தம் அமுலப்படுத்துவதாகக் கூறியும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரம் இந்த அரசாங்கம் தீவகம் முழுவதையும் ஒரு அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து அந்தத் தீவகத்தில் இருக்கக் கூடிய அனைத்து நிர்வாக வேலைப் பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி செய்கின்ற ஒரு சட்ட வடிவமொன்று தயாரிக்கப்பட்டு அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க கூடிய தயார் நிலையில் இருக்கின்றது.

இந்த வடிவம் தயாரிப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு கடைசியாக வந்த போது ஒரு சில புத்திஐீவிகளை அழைத்து அங்கு பேசப்பட்டிருக்கின்றது. ஆகவே தீவகத்திற்கான அந்த அதிகாரக் கட்டமைப்பு என்பது மகாவலி அதிகார சபை அபிவிருத்தி திட்டத்தையும் விட மிக மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடிய வகையில் கொழும்பால் மட்டும் நிர்ணயிக்கின்ற ஒரு அதிகார சபையாகத் தான் அந்த உத்தேச வரைபு சட்டம் அமைந்திருக்கின்றது”இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ”எப்படிப் பார்த்தாலும்  இந்த ஆட்சி என்பது தமிழ் முஸ்லீம் மலையக மக்களுக்கு ஒரு போதும் நீதியைக் கொடுக்கப் போவதில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்த ராஐபக்ச தரப்பின் தயவில் தங்கியிருக்கிற நிலையில் ரணில் விக்கிரசிங்கவின் ஆட்சி சிங்கள மக்களுக்கும் கூட நேர்மையாக நடந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த நிலைமையை மாற்றியமைக்ககூடிய ஒரே வழி மக்கள் அணிதிரண்டு ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதனூடாக மட்டும் தான் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Gajendrakumar PonnambalamJaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘யாழ் நிலா ஒடிஸி’ ரயில் சேவை ஆரம்பம்

Next Post

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

Related Posts

நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!
Uncategorized

2026-02-13
வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை
Uncategorized

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்
Uncategorized

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
Uncategorized

நவகமுவ துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

2026-01-19
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய
Uncategorized

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

2026-01-17
யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்
Uncategorized

யாழில். ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் மக்கள்

2026-01-17
Next Post
13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.