லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 7ஆவது லீக் போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கண்டி-பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காலி டைடன்ஸ் அணியும் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி டைடன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தசுன் சானக 30 ஓட்டங்களையும் செவோன் டேனியல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளையும் நன்ரே பர்கர் விக்கெட்டுகளையும் மஹேஸ் தீக்ஷன, சரித் அசலங்க மற்றும் நுவான் துசார ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 118 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி 12.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹமனுல்லா குர்பாஸ் 54 ஓட்டங்களையும் டவ்ஹித் ஹிரிதோய் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டினை வீழ்த்தினர்.