நபர் ஒருவர் விமானத்தில் பயணிக்காமலே 203 நாடுகளை சுற்றிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கை சேர்ந்த தோர் பீட்டர்சன்(Thor Pedersen ) என்ற நபரே இவ்வாறு ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாமல் 202 நாடுகளை வலம் வந்துள்ளார்.
ஐ.நா சபையானது உலகில் 195 நாடுகளை அங்கீகரித்துள்ள நிலையில் அந் நாடுகள் மற்றும் பகுதியளவு அங்கீகாரம் பெற்ற பிராந்தியங்களையும் சேர்த்து மொத்தமாக 203 நாடுகளுக்கு பீட்டர்சன் பயணித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் உலகை சுற்றி வரும் பயணத்தை தொடங்கிய இவர், கடந்த மே 24ஆம் திகதி 203 ஆவது நாடான மாலத்தீவை அடைந்துள்ளார்.அங்கிருந்து எம்வி மிலான் மர்ஸ்க் என்ற மாபெரும் சரக்கு கப்பல் மூலமாக தாய் நாடான டென்மார்க்கை வந்தடைந்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றி பார்க்காமல் வீடு திரும்புவதில்லை என்ற இலக்குடன் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது தங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுடன் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு 3,500 நாட்கள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.