பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் அனைத்து பிரதிகளும் இனிமேல் காலாவதி ஆகாது என பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சான்றிதழ்களின் தொடர்புடைய பிரதிகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் கால எல்லையின்றி ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களின் பிராக்டிக்கல் தெளிவாக இருந்தால் அவற்றைப் பெற மீள பெற்றுக்கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சான்றிதழ்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே புதிய பிரதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.