கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.