மேற்கு ஆப்ரிக்க நாடான கபோனில் (Gabon) நேற்றைய தினம் இராணுவத்தினர், புரட்சி மூலம் ஆட்சியைக் கைபற்றியுள்ளனர்.
இதனையடுத்து அந்நாட்டின் ஜனாதிபதி அலி பொங்கோ (Ali Bongo) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை தலைநகர் லிப்ரெவெல்லியில் ஆட்சி கவிழ்ப்பை மக்கள் கொண்டாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அலி போங்கோ 3-வது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் இராணுவத்தினர் ஆட்சியை பிடித்ததாக தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர்.
இதனிடையே வீட்டுக்காவலில் உள்ள ஜனாதிபதி போங்கோ உலகநாடுகளிடம் உதவி கோரியுள்ளார். காபோன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.