சீன அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அந்நாட்டின் புதிய வரைபடத்துக்கு இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா,தாய்வான் ஆகிய நாடுகள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன.
சீனா தங்கள் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நாடுகள், எல்லைகளை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சீனா வெளியிட்ட இப்புதிய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகள், அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு பிலிப்பைன்ஸ் கடல் பகுதி, தென்சீனக் கடலில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.