இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
மான்செஸ்டர் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லரும் நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பேர்ட்டும் தலைமை தங்கவுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரிலும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.