`ஜப்னா எடிஷன்`
(Jaffna Edition) எனப் பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் இன்று ஆரம்பமானது.
கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில், கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண, யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கைத்தொழில் உற்பத்தி கண்காட்சிக்கூடமொன்று திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன், சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டனர்.
மேலும் இக்கண்காட்சியானது நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.