லிபியாவைத் தாக்கிய டேனியல் புயல் காரணமாகவும், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் இதுவரை 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மேலும்,ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பலர் காணமற்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளதாகவும் இதனால் டெர்னா, பெடா, சுசா உட்பட பல்வேறு நகரங்களை புயல் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் காணமற்போணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.