யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.