ஆசியக் கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் ஆறாவது லீக் போட்டியில், பங்களாதேஷ் அணி, இந்திய அணிக்கு 266 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, சகிப் அல் ஹசன் 80 ஓட்டங்களையும் டவ்ஹித் ஹிரிதோய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் சற்று நேரத்தில், 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியக் கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.