மீனை உட்கொண்ட பெண்ணொருவர் கை, கால்களை இழந்த சோக சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் லாரா பராசாஸ் என்ற 40 வயதான பெண்ணே இவ்வாறு தனது கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.
இவர் அண்மையில் சந்தைக்குச் சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து சமைத்து உட்கொண்டுள்ளார். இதன்போது அவர் உணவருந்திய சிறிது நேரத்திலேயே அவரது கை விரல்கள் ,பாதங்கள் மற்றும் கீழ் உதடு என்பன கறுப்பாக மாறியுள்ளன.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
அத்துடன் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவரது கை, கால்களும் முற்றிலுமாக செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லாராவின் தோழியான மெசினா கருத்துத் தெரிவிக்கையில் ”லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து உண்ண வேண்டும். லாரா மீனை முறையாக வேக வைக்காமல் அப்படியே உட்கொண்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்” இவ்வாறு அவர் கூறினார்.