யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி”சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகளினாலேயே இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மனு மீதான விசாரணைகள் இன்று(22) எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, இதுதொடர்பான தீர்ப்பும் இன்றைய தினமே வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலுக்குத் தடை கோரி, யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.