அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய ஒசிரிஸ் – ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம் நேற்று உட்டா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
குறித்த விண்கலம் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விண்ணுக்கு ஏவப்பட்டிருந்தது. இந்தநிலையில், சிறு கோள்களின் தூசி துகள் மாதிரிகளை அது பூமிக்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும் இதன் மூலம் பூமி குறித்து பல தகவல்களை பெற முடியும் என நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது